சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர திமுக மனு
சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர திமுக பேரவை செயலாளர் சீனிவாசனிடம் மனு கொடுத்துள்ளது.
அதிமுக கொறடா ராஜேந்திரன் எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோர் அமமுகவில் பொறுப்பில் இருப்பதாக சபாநாயகரிடம் புகார் அளித்திருந்தார்.அதிமுக கொறடா ராஜேந்திரன் சபாநாயகரிடம் புகார் அளித்திருந்த நிலையில் 3 எம்எல்ஏக்களிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பினார்.
இந்நிலையில் சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர பேரவை செயலாளர் சீனிவாசனிடம் திமுக சார்பில் அதன் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மனு கொடுத்துள்ளார்.