கள்ளக்குறிச்சி விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் – சபாநாயகர் அப்பாவு.!

amilnadu Assembly - Appavu

சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது. தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று முதல் 22ஆம் தேதி வரை பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து சட்டப்பேரவையில் விவாதம் நடைபெற இருக்கிறதயது. கடைசி நாள் முதல்வர் ஸ்டாலின் உரையுடன் கூட்டத் தொடர் நிறைவடையும். அதன் பிறகு சபாநாயகர் அப்பாவு, தேதி குறிப்பிடாமல் அவையை ஒத்திவைப்பார்.

இந்நிலையில், இந்த ஆண்டின் 2ஆவது கூட்டத்தொடர், இன்று காலை 10 மணிக்கு தொடங்கப்பட்டது. அப்போது, மறைந்த திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி, குவைத் தீ விபத்தில் உயிரிழந்தோர் உள்ளிட்டோருக்கு தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதனைதொடர்ந்து, சிபிஎம் சட்டமன்ற குழு தலைவர் நாகை மாலி, நெல்லை மாஞ்சோலை மற்றும் கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதிக்க கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர, சபாநாயகர் அப்பாவுவிடம் கடிதம் கொடுத்துள்ளார்.

இதன் பின்னர், சபாநாயகர் அப்பாவு கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் குறித்த உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்தோடு, கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிஉள்ளார்.

இதனையடுத்து, சட்டப்பேரவையில் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு அவை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், நாளை (ஜூன் 21) முதல் ஒவ்வொரு துறை சார்ந்த மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்