TN Assembly 2024 - appavu [file image]
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜூன் 20ம் தேதியே தொடங்குவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை வருகின்ற ஜுன் 24ஆம் தேதி அன்று கூடும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நேற்றைய தினம் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியானதால், 24-ஆம் தேதிக்கு பதிலாக 4 நாள்கள் முன்னதாக, (அதாவது) ஜுன் 20-ல் சட்டப்பேரவையை கூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்து.
சென்னையில் சபாநாயகர் அப்பாவு தலைமையில், சட்டப்பேரவை அலுவல்
ஆய்வுக் கூட்டம் நாளை (புதன்கிழமை) நடைபெறவுள்ள நிலையில், இன்று நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு,” தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர், ஜூன் 20-ம் தேதி தொடங்கும். விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பட் சட்டப்பேரவை உறுப்பினராக நாளை (ஜூன் 12) பதவி ஏற்கிறார்” என்று கூறினார்.
அதன்படி, ஜூன் 20-ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 10.00 மணிக்கு, சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கவுள்ளது. அன்றைய தினம், மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும்.
தர்மபுரி : இன்று தர்மபுரியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த…
தருமபுரி : தேமுதிகவின் இளைஞரணி செயலாளராக விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார். பிரேமலதாவின் வசம் இருந்த பொருளாளர்…
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தின் தலைநகரான கொல்கத்தாவில் உள்ள ஒரு ஹோட்டலில் பயங்கர தீ ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில்…
நீலகிரி : மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு விலையின்றி வீடு வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 20 அடுக்குமாடி குடியிருப்புகளை…
சென்னை : கடந்த ஏப்ரல் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் தவெக சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவையில்…
மதுரை : நேற்று மதுரை கே.கே நகர் பகுதியில் உள்ள ஸ்ரீ கிண்டர் கார்டன் எனும் தனியார் மழலையர் பள்ளியில்…