எங்க போன பாலு?உலகம் ஓரே சூனியமாக இருக்கு- மவுன அஞ்சலி பாடல் வெளியீடு
எஸ் பிபி மறைவால் இசையமைப்பாளர் இளையராஜா மிகவும் வருத்தத்தில் உள்ளார்.இவர்களூக்குள் மனக்கசப்பு இருந்தபோதிலும் சரியாகி விடும்.இசையில் எவ்வித கசப்பும் இன்றி தேனிசையை கொடுத்தவர்கள்.
அந்தளவுக்கு சினிமாவையும் தாண்டி இவர்களது நட்பு மிக ஆழமானது நட்பு கிட்டத்தட்ட 50 ஆண்டுக்கால அரை சதம் கண்டது.
எஸ் பிபி மறைவுக்கு ஏற்கனவே இரங்கல் வீடியோ வெளியிட்டு இருந்த இளையராஜா அதில் பாலு நீ போயிட்ட எங்க போன இங்கு உலகம் ஓரே சூனியமாக இருக்கிறது. எனக்கு இந்த உலகத்துல ஒன்றுமே தெரியல பேச வார்த்தை வரல என உருக்கமாக கூறியிருந்தார்.
இந்நிலையில் எஸ்பிபி மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தானே இசை அனைத்து பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பாடலில் கானம் பாடிய வானம் பாடியே
உன் கீதம் இனறு ஏன் மவுனமானதோ?
உன் ராக ஆயுள் இன்று அமைதியானதோ..
அமைதியானதோ பாடி பாடியே அன்பை வளர்த்தாய்..
போற்றி போற்றியே தெய்வத்தை துதிப்பாய்..
இசை எனும் வானில் திசையை அளந்தாய்..
இன்னுயிர் யாவையுமே பாடியே தீர்த்தாய்
காலம் கடந்து உந்தன் உயிரின் ஓசை
காற்று மண்டலத்தில் வசித்தாலும் கண்ணெதிரே
உனை காணும் வர கிடைக்குமா? மீண்டும் வரம் கிடைக்குமா?
அஞ்சலி..அஞ்சலி.. பாடும் நிலவிற்கு மவுன அஞ்சலி என்று அந்த வரிகள் இடம்பெற்றுள்ளன.அந்த குரல் என்னவோ எல்லோரையும் உண்மையில் உலுக்கி தான் விட்டு சென்றுள்ளது.
தினச்சுவடின் சார்பாக காந்தக்குரலுக்கு கண்ணீர் அஞ்சலியை செலுத்துகிறது. உங்களோடு சேர்ந்து….!