#Breaking:அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீது வழக்கு பதிவு – எங்கெங்கு சோதனை!

Published by
Edison

கோவையில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர்.தான் ஆட்சியில் இருந்தபோது டெண்டர்களை முறைகேடாக தனக்கு நெருக்கமானவர்களுக்கு கொடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் எஸ்.பி வேலுமணி மற்றும் அவருக்கு சொந்தமான 60 இடங்களில் சோதனை நடைபெற்றது.

இந்நிலையில்,வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக  அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மற்றும் 6 மாவட்டங்களில் அவருக்கு தொடர்புடைய 58 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

 கோவையில் எஸ்.பி வேலுமணி வீடு உட்பட 41 இடங்கள்,சென்னையில் 8 இடங்கள்,சேலத்தில் 4 இடங்கள்,திருப்பத்தூரில் இரண்டு,  நாமக்கல்-1,கிருஷ்ணகிரியில் 1,கேரளாவில் 1 என மொத்தம் 58 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து,முதற்கட்ட தகவலின் அடிப்படையில் ரூ.58.23 கோடிக்கு குறிப்பாக 3928% கூடுதலாக சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மேலும் 3 வழக்குகள் பதிந்துள்ளனர்.மேலும்,அவரது மனைவி,சகோதரர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.அந்த வகையில்,எஸ்.பி.வேலுமணி உள்பட 13 பேர் மற்றும் கூட்டு சேர்ந்து ஊழல் செய்ததாக 6 நிறுவனங்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும்,கோவையில் உள்ள வீட்டில் எஸ்.பி வேலுமணியிடம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் துருவித்துருவி கேள்வி கேட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Recent Posts

காதலர்களை கவர்ந்ததா தனுஷின் “NEEK”? நெட்டிசன்கள் சொல்லும் விமர்சனங்களை பாருங்கள்!

சென்னை : நடிகராக கலக்கி கொண்டு இருந்த தனுஷ் இப்போது இயக்குநராக கலக்கி கொண்டு இருக்கிறார். அவருடைய இயக்கத்தில் கடைசியாக வெளியான…

32 minutes ago

ஜஸ்ட் மிஸ்!! நூலிழையில் உயிர் தப்பிய கங்குலி.! நடந்தது என்ன?

உத்தரப் பிரதேசம் : இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐயின் முன்னாள் தலைவருமான சவுரவ் கங்குலி சென்ற கார் மேற்குவங்கத்தின்…

1 hour ago

சற்று ஆறுதல் அளிக்கும் தங்கம் விலை… இன்று சவரனுக்கு ரூ.360 குறைவு!

சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (பிப்.21) கிராமுக்கு ரூ.45 குறைந்துள்ளது. கடந்த 5 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.1,440…

2 hours ago

சென்னையில் ‘FICCI MEBC – South Connect 2025’! தொடங்கி வைக்கும் துணை முதல்வர் உதயநிதி!

சென்னை : இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபைகளின் கூட்டமைப்பு (FICCI) ஏற்பாட்டில், 'FICCI மீடியா & என்டர்டெயின்மென்ட் பிசினஸ்…

3 hours ago

Live : பாஜக vs திமுக ஹேஷ்டேக் வார் முதல்…திரைக்கு வந்த திரைப்படங்கள் வரை!

சென்னை : நேற்று திமுக டிவிட்டரில் #GetOutModi என்கிற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து கொண்டிருந்த நிலையில், நாளை நான்  காலை…

3 hours ago

ஹாட்ரிக் விக்கெட் போச்சு..என்னை மன்னிச்சுடு! போட்டிக்கு பின் ரோஹித் பேசியது என்ன?

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 2-வது போட்டி நேற்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற நிலையில், இந்தியா, வங்கதேசம்…

3 hours ago