கேரள அரசு தண்ணீர் தர முன்வந்தும் தமிழக அரசு மறுத்ததாக வெளியான தகவல்கள் உண்மையில்லை என்று அமைச்சர் வேலுமணி விளக்கம் அளித்துள்ளார்.
சென்னையின் தண்ணீர் தட்டுப்பாட்டை குறைக்க முதல்வர் அலுவலகம் கோரிக்கை வைத்தது. இதனை கவனம் கொண்ட கேரள முதல்வர் திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை செல்லும் ரயில்கள் மூலம் 20 லட்சம் லிட்டர் தண்ணீர் அனுப்பப்படும் என்று தெரிவித்தார்.
இதற்கிடையில் சரியான தண்ணீர் பஞ்சம் உதவ முன்வந்துள்ளது கேரளா என்று மக்கள் பேசி கொண்டிருந்த சில நிமிடத்தில் கேரள முதல்வர் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிடுகிறார்.அதில் தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பஞ்சத்திற்கு உதவ முன்வந்த கேரளாவின் உதவியை தமிழக அரசு வேண்டாம் என்று மறுத்து விட்டது என்று கேரள முதல்வர் பிரனாயி விஜயன் தெரிவித்தார்.
இது குறித்து உள்ளாட்சி துறை அமைச்சர் தெரிவிக்கையில் தமிழக முதல்வர் ,கேரள முதல்வரிடம் நாள் ஒன்றிக்கு 20 லட்சம் லிட்டர் தண்ணீர் இரயில் மூலம் அனுப்பலாமா? என்று கேட்டார்.
தற்போது முதல்வர் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனை சென்றிருப்பதால் முதல்வரின் செயலாளர் மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சர்,நகராட்சி அலுவலகம், குடிநீர் வழங்கல் துறை செயலாளர் அவர்களிடம் கலந்து ஆலோனை செய்து தகுந்த ஆலோசனைக்கு பிறகு கேரள அரசு தண்ணீர் தர முன் வந்ததற்கு மக்கள் சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறோம்.
சென்னையின் ஒருநாள் குறைந்த பட்ச தேவை 525 MLD தற்போது கேரளாவிலிருந்து இரயில் முலம் அனுப்பப்படும் 20 லட்சம் லிட்டர் நீரினை இங்கேயே சமாளித்து வருகிறோம் தேவை ஏற்படின் கண்டிப்பாக கேரள அரசின் உதவினை நாடுவோம் என்று தெரிவித்துள்ளார்.
கேரள அரசு தினமும் 2 MLD தண்ணீர் அனுப்பினால் உதவியாக இருக்கும் என தமிழக அரசு அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளார்கள் இது தொடர்பாக நாளை நடைபெற உள்ள குடிநீர் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று அவர் இது தொடர்பாக உரிய முடிவினை அறிவிப்பார்.இதற்கிடையில் கேரளா முதல்வர் கொடுத்த நீரை தமிழக அரசு மறுத்து விட்டது என்ற தகவல உண்மை இல்லை என்று தெரிவித்துள்ளார்
விழுப்புரம் : இன்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். தற்போது வரை பாமக நிறுவனராக…
சென்னை : அஜித்குமார் நடிப்பில் இன்று குட் பேட் அக்லி திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்த…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க பொருளாதாரத்தை கருத்தில் கொண்டும், உள்நாட்டு உற்பத்தியை பெருக்கும் நோக்கிலும் மற்ற…
சென்னை : அஜித் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. பிப்.6இல்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சமீபத்தில் இஸ்ரேலுக்கு 17%, ஜப்பானுக்கு 24%, கனடாவுக்கு 25%, இந்தியாவுக்கு 26%,பாகிஸ்தானுக்கு…
சென்னை : நடிகர் அஜித் குமார் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் உலகம்…