பாமக வேட்பாளர் பட்டியலில் அதிரடி மாற்றம்..! அன்புமணி ராமதாஸ் மனைவி தர்மபுரியில் போட்டி
Sowmya Anbumani: தர்மபுரி மக்களவைத் தொகுதியில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பாமக வேட்பாளர் மாற்றப்பட்டு, சௌமியா அன்புமணி வேட்பாளராக கறமிறக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில், தர்மபுரி தொகுதியில் பாமக சார்பில் அரசாங்கம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
Read More – காங்கிரஸில் இருந்து விலகிய விஜயதரணிக்கு பாஜகவிலும் சீட் இல்லை!
ஆனால், தற்போது வேட்பாளர் மாற்றப்பட்டுள்ளதாக கட்சித் தலைமை அறிவித்துள்ளது. அதன்படி அரசாங்கத்திற்கு மாற்றாக பாமக தலைவர் அன்புமணியின் மனைவியும் பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவருமான செளமியா அன்புமணி தர்மபுரி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
Read More – மீண்டும் அமைச்சராக பதவியேற்றார் பொன்முடி!
இதுதொடர்பாக பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2024 மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தருமபுரி மக்களவைத் தொகுதியில் அரசாங்கம் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
Read More – விருதுநகரில் களமிறங்கும் விஜயகாந்த் மகன்.. தேமுதிக வேட்பாளர் லிஸ்ட்….
இப்போது அவர் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி P.hd., போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி வெளியானதும் தர்மபுரி பாட்டாளி மக்கள் கட்சியினர் மாவட்டத்தின் நகர பேருந்து நிலையத்தில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் முனைவர் சௌமியா அன்புமணி ராமதாஸ் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது………. pic.twitter.com/gdIa4VGhg9
— Dr.KALLIPPADI SETHUPATHI ???????????? (@sethu8524) March 22, 2024