தூத்துக்குடி கனமழை : பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண உதவிகள் துவக்கம்.!
தென் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்ட மக்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் . குறிப்பாக தாமிரபரணி ஆற்றின் கரையோர வழித்தடத்தில் இருந்த பகுதிகள் பெருபாலும் வெள்ளத்தில் சிக்கியுள்ளன. இன்னும் பல்வேறு இடங்களில் வெள்ள பதிப்புகளில் இருந்து மக்கள் மீண்டு வர தவித்து வருகின்றன.
சென்னை எண்ணூர் முகத்துவாரத்தில் எண்ணெய் கசிவு! நிவாரணம் அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தென்மாவட்ட வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்திற்கு வந்திருந்தார். வெள்ளம் பதித்த பணிகளை நேரில் கண்டு, மீட்பு பணிகள் குறித்து அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களிடம் கேட்டறிந்தார். மேலும், முகாம்களில் தங்கவைக்கப்பட்டு இருந்த மக்களிடம் நேரடியாக உரையாடி குறைகளை கேட்டறிந்தார்.
அதன் பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின், கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை அறிவித்தார். திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா 6000 ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் என அறிவித்தார். மேலும் சேதமடைந்த வீடுகளுக்கு, உயிரிழந்தோருக்கு, கால்நடைகளுக்கு என பல்வேறு நிவாரண உதவிகளை அறிவித்தார்.
இதில் முதற்கட்டமாக திருநெல்வேலி , தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு வெள்ள நிவாரண நிதி 6000 ரூபாய்க்கான விண்ணப்பங்கள் குறிப்பிட்ட பகுதிகளில் ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் விநியோகிக்கப்பட்டு வருகிறது. அதே போல, தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், ஏரல் பகுதிகளில் கனமழையால் சேதமடைந்த வீடுகளை கணக்கெடுக்கும் பணிகளை வட்டாட்சியர்கள் தலைமையிலான வருவாய்த்துறை அலுவலர்கள் தொடங்கியுள்ளனர்.