நாட்டின் அதிவேக ரயிலில் புதிய வசதி… அறிவித்தது தென்னக ரயில்வே..
- தேஜஸ் ரயிலில் புதிய வசதி.
- தெற்கு ரயில்வே புதிய அறிவிப்பு.
தேஜஸ் எக்ஸ்பிரஸ் என்ற அதிநவீன புதிய ரயிலைய் இந்திய இரயில்வே அறிமுகம் செய்தது., இந்த ரயிலில் பெட்டி முழுவதும் குளிரூட்டப்பட்ட இந்தியாவின் அதிவேக ரயில் தான் இந்த தேஜஸ் ரயில், இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 130 முதல் 200 கிமீ ஆகும். இந்தியாவில் முதல் தேஜஸ் விரைவு ரயில், 24 மே 2017 அன்று மும்பை சத்திரபதி சிவாசி ரயில் நிலையத்திலிருந்து, 551.7 கிமீ தொலைவில் உள்ள கோவாவின், கர்மலி ரயில் நிலையம் வரை இயக்கப்பட்டது. இந்த அதிநவீன தேஜஸ் விரைவு ரயிலில் புதிய பொழுதுபோக்கு வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தற்போது தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை – மதுரை இடையே தேஜஸ் அதிவேக விரைவு ரயில் இயக்கப்படுகிறது.
இந்த ரயில், வியாழக்கிழமை தவிர்த்து அனைத்து நாட்களிலும் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ரயிலில் புதிய பொழுதுபோக்கு வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதில் “மேஜிக் பாக்ஸ்” என்ற இந்த புதிய பொழுதுபோக்கு வசதி வைஃபை மூலம் இயங்கும். இதன் மூலம் இதில் பயணம் செய்யும் பயணிகள் 500 மணி நேரம் பல்வேறு வகையான வீடியோக்களை கண்டுகளிக்கலாம். இதில் தெற்கு ரயில்வே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள படங்கள், குழந்தைகளுக்கான வீடியோக்கள், அரசு திட்டங்கள் தொடர்பான வீடியோக்களை மட்டும் கண்டுகளிக்கலாம்.