தூத்துக்குடி பனிமயமாதா கோவில் தங்க தேர் திருவிழாவுக்கு சிறப்பு ரயில்.! தென்னக ரயில்வே அறிவிப்பு.!
தூத்துக்குடி பனிமயமாதா கோவில் தங்க தேர் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
தூத்துக்குடியில் பிரசித்திபெற்ற தூய பனிமய மாத கோவில் திருவிழா ஆண்டு தோறும் ஜூலை 26இல் துவங்கி 10 நாள் திருவிழா நடைபெறும். 10ஆம் நாளான ஆகஸ்ட் 5ஆம் தேதி தூத்துக்குடி மாவட்ட மக்கள் அனைவரும் திரளாக வந்து கலந்து கொள்வர். இதனால் அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம்.
மேலும் குறிப்பிட்ட ஆண்டுகளில் மட்டும் பனிமய மாதா கோவில் திருவிழாவில் தங்கத்தேர் பவனி நடைபெறும். இந்தாண்டு கத்தோலிக்க மறைமாவட்டத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 16-வது முறையாக தங்கத்தேர் பவனி நடைபெற உள்ளது.
இதனை காண பல்வேறு ஊர்களில் இருந்து தூத்துக்குடிக்கு மக்கள் வருவார்கள் என்பதால், அவர்கள் வசதிக்கேற்ப சிறப்பு ரயிலை தென்னக ரயில்வே அறிவித்துள்ள்ளது. அதன்படி, வருகிற ஆகஸ்ட் 3ஆம் தேதி மாலை 4.15க்கு சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கும், ஆகஸ்ட் 6ஆம் தேதி பிற்பகல் 2.45க்கு தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.