புரேவி புயல் காரணமாக ரயில்கள் ரத்து..தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வங்கக் கடலில் நிலை புரேவிபுயல் இன்று காலை 11 மணி அளவில் வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ளது. இது பாம்பனில் இருந்து கிழக்கே சுமார் 40 கிலோ மீட்டர் மற்றும் கன்னியாகுமரியில் இருந்து கிழக்கு வடகிழக்கில் சுமார் 260 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இது இன்று மதியம் பாம்பன் பகுதியை கடந்து பின்னர் மேற்கு -தென்-மேற்கு திசையில் தென் தமிழக கடற்கரையை ஒட்டி நகர்ந்து நாளை அதிகாலை பாம்பன் -கன்னியாகுமரியை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், புரேவி புயல் காரணமாக இன்று வண்டி எண் 02693 சென்னை எழும்பூர் – தூத்துக்குடி சிறப்பு ரயில் மற்றும் வண்டி எண் 06236 மைசூர்- தூத்துக்குடி சிறப்பு ரயில்கள் மதுரை வரை இயக்கப்படும்.
மேலும், நாளை வண்டி எண் 02694 தூத்துக்குடி – சென்னை மற்றும் வண்டி எண் 06235 தூத்துக்குடி – மைசூர் ஆகிய சிறப்பு ரயில்கள் தூத்துக்குடி , மதுரை ரயில் நிலையங்களுக் கிடையே ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில்கள் மதுரையில் இருந்து இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
Changes in pattern of services #BureviCyclone pic.twitter.com/USCpMbpUCM
— Southern Railway (@GMSRailway) December 3, 2020