பறக்கும் ரயிலை பூங்கா வரை இயக்கம் – தெற்கு ரயில்வே ஆலோசனை.!
பறக்கும் ரயிலை பூங்கா வரை இயக்க ஆலோசனை நடத்தி வருவதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
சென்னை கடற்கரை – சேப்பாக்கம் இடையே பறக்கும் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜூலை 1 முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 31 வரை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்தது.
4வது வழித்தட பணிகளுக்காக பறக்கும் ரயில் சேவை மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், சேப்பாக்கத்தில் இருந்து வேளச்சேரி வரை பறக்கும் ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், தற்போது பயணிகளுக்கு பெரிய அளவில் பாதிப்பு சிந்தாதிரிப்பேட்டை அல்லது பூங்கா வரை இல்லாமல் வேளச்சேரி பறக்கும் ரயில்களை இயக்குவது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருவதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.