தென் மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் தொடங்கிய மழை தொடர்ந்து தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பெய்து வருகிறது. இந்நிலையில், நெல்லை- தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் தென் மாவட்டங்களுக்கு வரக்கூடிய 10-க்கும் மேற்பட்ட ரயில்கள் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி நிஜாமுதீன்- குமரி விரைவு ரயில் நிறுத்தப்பட்டுள்ளது. முத்துநகர் ரயில் கோவில்பட்டியில் நிறுத்தப்பட்டுள்ளது. நெல்லை- சென்னை வந்தே பாரத் ரயில் இரு மார்க்கத்திலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. கோவில்பட்டி- தூத்துக்குடி இடையே ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல திருச்செந்தூர் விரைவு ரயில் நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பெங்களூர்- நாகர்கோவில் விரைவு ரயில் மதுரை மட்டுமே இயக்கப்படுகிறது. மும்பை – நாகர்கோவில் விரைவு ரயில் திண்டுக்களுடன் நிறுத்தப்பட்டுள்ளது. சென்னை -எழும்பூரில் இருந்து புறப்பட்ட கொல்லம் விரைவு ரயில் விருதுநகர் உடன் நிறுத்தப்பட்டுள்ளது.
சென்னை -குருவாயூர் எக்ஸ்பிரஸ், திருச்சி- திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ், நாகர்கோவில்- கோவை எக்ஸ்பிரஸ் ரயில்கள் , தாம்பரம் -செங்கோட்டை விரைவு ரயில் விருதுநகர், ராஜபாளையம் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும் எனவும் நெல்லை- தூத்துக்குடியில் இருந்து புறப்படும் முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
இஸ்ரேல் : வடக்கு இஸ்ரேலிய நகரமான சிசேரியாவில் உள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வீட்டிற்கு வெளியே பிளாஷ் வெடிகுண்டுகள்…