இரட்டை இலை சின்னத்தில் தென்னரசு போட்டி?
பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதலுக்கு பின்பு, இபிஎஸ் தரப்பு வேட்பாளர் தென்னரசு இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள தென்னரசு இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் தென்னரசுவை வேட்பாளராக அறிவித்து, அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் படிவம் வெளியிட்டார்.
பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதலுக்கு பின்பு இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. பொதுக்குழு மூலம் வேட்பாளரை தேர்வு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களிடமும் இதில் கையொப்பம் பெற்று, திங்கள் (பிப். 6) காலை தேர்தல் ஆணையத்திடம் சமர்பிக்கப்படவுள்ளது.