“தென்னகத்து போஸ்” முத்துராமலிங்கத் தேவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்,அமைச்சர்கள் பங்கேற்பு !
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அடுத்துள்ள பசும்பொன் கிராமத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 115 ஆம் ஆண்டு ஜெயந்தி இன்று நடைபெறுகிறது.
பசும்பொன்னில் நடக்கும் இன்றைய விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொள்ளவில்லை. ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில் ” கொடுங்கோல் சட்டத்துக்கு எதிராக மக்களை அணிதிரட்டியவர் !
ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் நேதாஜியின் கரத்தை வலுப்படுத்தியவர்!
“தென்னகத்து போஸ்” ஐயா பசும்பொன் திருமகனார் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் தீரத்தையும், தியாகத்தையும், நற்பணிகளையும் நன்றியோடு நினைவுகூர்கிறேன்!” என்று தெரிவித்துள்ளார்.
கொடுங்கோல் சட்டத்துக்கு எதிராக மக்களை அணிதிரட்டியவர்!
ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் நேதாஜியின் கரத்தை வலுப்படுத்தியவர்!
“தென்னகத்து போஸ்” ஐயா பசும்பொன் திருமகனார் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் தீரத்தையும், தியாகத்தையும், நற்பணிகளையும் நன்றியோடு நினைவுகூர்கிறேன்! pic.twitter.com/4Fq7y8cjSw
— M.K.Stalin (@mkstalin) October 30, 2022
தமிழக அரசு சார்பாக அமைச்சர்கள் அமைச்சர்கள் துரைமுருகன், நேரு, பெரியசாமி, ராமச்சந்திரன், மூர்த்தி, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ், ராஜகண்ணப்பன்,எம்எல்ஏ டிஆர்பி ராஜா, எம்பி தங்கம் தென்னரசு
மற்ற சட்டமன்ற மற்றும் நாடுளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.