தாழ்வு மண்டலமாக வானிலை மாற்றம் காரணமாக அரபிக்கடல் பகுதியில் மினிக்காய் தீவுப்பகுதியில் கன்னியாகுமரி அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மாறியது. இதன் காரணமாக தென் மாவட்டங்களில் குறிப்பாக தூத்துக்குடி, பாபநாசம், செங்கோட்டை, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், மணிமுத்தாறு உள்ளிட்ட இடங்களில் நேற்று முன்தினம் கனமழை பெய்துள்ளது. பருவமழை இல்லாத காலத்தில் கன மழை பெய்துள்ளது.
இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:-அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் 6 மணி நேரத்தில் மணிக்கு 25 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து மினிக்காய் தீவுக்கு தென்கிழக்கில் 50 கிலோ மீட்டர் தூரத்திலும், திருவனந்தபுரத்தில் இருந்து தென்மேற்கு திசையில் 380 கிலோ மீட்டர் தூரத்திலும் நிலை கொண்டுள்ளது. இது குமரியில் இருந்து ஏறத்தாழ 500 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது என்று கூறலாம்.
இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய தென் மாவட்டங்களில் இன்று (வியாழக்கிழமை) கனமழை பெய்யும். வட மாவட்டங்களில் சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.கன்னியாகுமரி, கேரளாவின் தெற்கு பகுதி மற்றும் மாலத்தீவு பகுதிகளில் தொடர்ந்து 16-ந் தேதி (நாளை) காலை வரை மணிக்கு 45 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும்.
இதன் காரணமாக அந்த பகுதியில் மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்லவேண்டாம். இந்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில் நகர்ந்து சென்று வலுவிழக்கும் நிலையில் உள்ளது.இவ்வாறு எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…