தென் சென்னை மக்களவை தொகுதி.. ஓர் பார்வை..!

Chennai South

South Chennai:  தமிழ்நாட்டின் மூன்றாவது மக்களவை தொகுதியாக தென் சென்னை இருக்கிறது. கடந்த 1957ல் உருவாக்கப்பட்ட இந்த தென் சென்னை மக்களவை தொகுதியானது இதுவரை 17 முறை தேர்தலை சந்தித்துள்ளது. இதில், ஒரு இடைத்தேர்தல் அடங்கும். அதுமட்டுமில்லாமல், சென்னையில் உள்ள 3 மக்களவைத் தொகுதிகளில் அதிக வாக்காளர்களை கொண்ட மிகப்பெரிய தொகுதி தென் சென்னை தான்.

2008ம் ஆண்டு மறுசீராய்வு:

இந்த தென் சென்னை தொகுதி உருவாக்கப்பட்டு 51 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2008ல் தொகுதி மறுசீரமைக்கப்பட்டது. அதிலிருந்து, தென் சென்னை மக்களவை தொகுதியில் விருகம்பாக்கம், சைதாபேட்டை, தியாகராய நகர், மைலாப்பூர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகள் இணைக்கப்பட்டது.

தொகுதி மறுசீரமைப்புக்கு முன்பு தியாகராய நகர், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், சைதாப்பேட்டை, ஆலந்தூர், தாம்பரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் இடம்பெற்றிருந்தன என்பது குறிப்பிடப்படுகிறது. இதில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள 32 பொது தொகுதிகளில் தென் சென்னை தொகுதியும் ஒன்றாகும்.

READ MORE- மத்திய சென்னை மக்களவைத் தொகுதி.. ஓர் பார்வை..!

வெளியூர்வாசிகள் அதிகம்:

தமிழகத்திலேயே அதிக வாக்காளர்கள் இருக்கும் சட்டமன்ற தொகுதி எது என்றால், அது தென் சென்னையில் இருக்கும் சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதி தான். இதனாலே தென் சென்னையில் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. இந்த தொகுதியில் படித்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் நிலையில், அதற்கேற்ப வெளி மாநிலத்தவர் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அதிகம் இருக்கின்றனர்.

பல்வேறு மத வழிபாட்டு தலங்கள், சுற்றுலாப் பகுதிகள், ஐஐடி உள்ளிட்ட சிறந்த கல்வி நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள் போன்றவை இருப்பதால், தென் சென்னை முழுவதும் பெரிய கட்டடங்கள் மற்றும் பெரிய பெரிய அடுக்குமாடி குடியிருப்புகளாகவே காணப்படும்.

இன்னும் சொல்லப்போனால் டி நகர் பஜார், கோயாம்பேடு போன்றவைகளையும் தென் சென்னை உள்ளடக்கியுள்ளது. மேலும், தென் சென்னையில் மக்களவை தொகுதியில் உள்ள வேளச்சேரி, தியாகராய நகர், மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பிராமணர்கள் அதிகளவில் வசித்து வந்தாலும், பலதரப்பட்ட மக்ககளும் வசித்து வருகின்றனர்.

திமுகவின் ஆதிக்கம்:

இதுவரை 17 முறை தேர்தலை சந்தித்துள்ள தென் சென்னை மக்களவை தொகுதியில் அதிக முறை வெற்றி பெற்று இங்கையும் திமுகதான் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இன்னும் சொல்லப்போனால், மத்திய சென்னையை போல் தென் சென்னையும் திமுகவின் கோட்டை என்றும் கூறலாம்.

அதன்படி, தென் சென்னை மக்களவைத் தொகுதியில் திமுக 8 முறையும், காங்கிரஸ் 5 முறையும், அதிமுக 3 முறையும் வெற்றி பெற்றுள்ளது. அதில், அதிகபட்சமாக இந்த தொகுதியில் 4 முறை மக்களவை உறுப்பினராக திமுக எம்பியும் பொருளாளருமான டி.ஆர்.பாலு தேர்வாகியுள்ளார்.

READ MORE-  வடசென்னை.! உங்கள் தொகுதி.. உங்கள் பார்வைக்கு….!

அண்ணாவின் தொகுதி:

மறைந்த முன்னாள் முதலமைச்சரும் திமுக நிறுவனருமான அண்ணா என்ற அண்ணாதுரை அவர்கள் நாடாளுமன்றத்திற்கு தேர்வானது இந்த தென் சென்னை தொகுதியில் இருந்து தான். இதுபோன்று வைஜயந்திமாலா பாலி உள்ளிட்ட பிரபலங்கள் மற்றும் முரசொலி மாறன் உள்ளிட்டவர்களும் வெற்றி பெற்றுள்ளனர்.

கணிப்பு:

தென் சென்னை மக்களவை தொகுதியை பொறுத்தவரை அதிக முறை திமுக வசம் இருந்து வருவதால், மீண்டும் திமுகவுக்கே வெற்றி கிடைக்கும் என கணிக்கப்படுகிறது.

2019 தேர்தல் முடிவுகள்:

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 2019ம் ஆண்டு நடைபெற்றது. அப்போது, தென் சென்னை தொகுதியில், திமுக தமிழச்சி தங்கப்பாண்டியன் வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 40 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இதில், திமுக வேட்பளர் தமிழச்சி தங்கப்பாண்டியன் 5,66,504 வாக்குகள் பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஜே. ஜெயவர்த்தன் 3,03,146 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தார். எனவே, திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கப்பாண்டியன் 2,63,358 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

 

தொகுதிகள் வெற்றி தோல்வி
விருகம்பாக்கம் ஏ. எம். வி. பிரபாகர் ராஜா (திமுக)
வி.என்.விருகை ரவி (அதிமுக)
சைதாப்பேட்டை மா.சுப்பிரமணியம் (திமுக )
சைதை சா. துரைசாமி (அதிமுக) )
தியாகராய நகர் ஜெ.கருணாநிதி (திமுக)
தி.நகர் சத்யா (அதிமுக)
மயிலாப்பூர் த. வேலு (திமுக)
ஆர். நட்ராஜ் (அதிமுக)
வேளச்சேரி ஜே. எம். எச். அசன் மவுலானா(காங்கிரஸ்)
எம்.கே.அசோக்
      (அதிமுக )
சோழிங்கநல்லூர் எஸ். அரவிந்த் ரமேஷ் (திமுக)
கே. பி. கந்தன் (அதிமுக)

வாக்காளர் எண்ணிக்கை:

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர்கள் மொத்தம்
993590 1013772 454 2007816

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
TVK Vijay Dharmapuri
Pradeep John -TN Rains
Kasthuri Shankar - Police Arrest
Arvind Kejriwal - Kailash Gahlot
Space X - Elon Musk
tn rainy