தருமபுரி தொகுதியில் சௌமியா அன்புமணி தொடர் முன்னிலை.!
மக்களவை தேர்தல் : தமிழகம் முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில் தருமபுரி தொகுதியில், பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி 100174 வாக்குகள் பெற்று 15369 முன்னிலையில் வாக்கு வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார்.
அதற்கு அடுத்தபடியாக, திமுக வேட்பாளர் மணி 84805 வாக்குகளுடன் 2ஆவது இடத்திலும், அதிமுக வேட்பாளர் அசோகன் 69710 வாக்குகளுடன் 3ஆவது இடத்திலும் உள்ளனர்.