ரஜினியை கடுமையாக பேசியிருந்தால் வருந்துகிறேன் – சீமான்..!
சென்னையில் செய்தியாளர்களை சந்த்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில், நடிகர் ரஜினிகாந்தின் முடிவை நான் வரவேற்கிறேன். அவரும், அவர் குடும்பத்தினரும் கூறுவதுபோல அவர்ருடைய நிம்மதி, அமைதி ரொம்பவும் மிகமையானது. கடந்த காலங்களில் அவர் மீது பெரும் மதிப்பு வைத்திருந்த ரசிகனின் ஒருவன் நான் அரசியல் ரீதியாக வரும் போது அவர் மீது கடுமையான விமர்சனங்களை, கடும் சொற்களை பயன்படுத்தி இருக்கலாம்.
அந்த சொற்கள் அவரையும் அவரது குடும்பத்தினரையும் அல்லது ரசிகர்களை காயப்படுத்தி இருந்தால் நான் வருந்துகிறேன் என தெரிவித்தார். இனி எப்போதும் எங்களுடைய பெரும் புகழ்ச்சிக்கு உரியவர் ரஜினிகாந்த். ஆசிய கண்டம் முழுவதும் ரஜினியின் புகழ் பரவி உள்ளது. தமிழ் மக்கள் அவரைப் பெரிதும் கொண்டாடுகின்றனர். இனி நாம் தமிழர் பிள்ளைகளும் அவரை கொண்டாடுவோம் என சீமான் தெரிவித்தார்.