சூரியனுக்கும் பூமிக்கும் இடையே ஒரே நேர்கோட்டில் நிலவு வருகையில் நிலவின் நிழல் பூமியின் மீது விழும் இந்த நிகழ்வுகள் சூரிய கிரகணம் என அழைக்கப்படுகிறது. இன்று காலை 8 மணி முதல் காலை 11.11 வரை 3மணிநேரம் நிகழ உள்ளது. சரியாக சூரிய கிரகணத்தை காலை 9.35 மணிக்கு 2 நிமிடங்கள் நம்மால் பார்க்கமுடியும். இந்த கிரகணமானது மூன்று பகுதிகளாக பிரிக்கபட உள்ளது.
அதில் ஒன்று பகுதி கிரகணம் காலை 8.06 மணிக்கு தொடங்கும் கிரகணம், அடுத்து அதிகபட்ச கிரகணம் காலை 9.29 மணிக்கு இருக்கும் இருக்கும் கிரகணம். இறுதியாக பகுதி கிரகணம் காலை 11.10 மணிக்கு முடிவடையும் என விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
இந்த சூரிய கிரகண நிகழ்வானது இந்தியா முழுவதும் குறிப்பிட்ட இடங்களில் தெளிவாக தெரியவரும். தமிழ்நாட்டில் ஊட்டி, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை ஆகிய ஊர்களில் தெளிவாக தெரியும். அதே போல கேரளா கோழிக்கூடு பகுதியிலும், கர்நாடக மங்களூரு பகுதியிலும் இந்த கிரகணம் தெரியவரும்.
நீண்ட வருடங்களுக்கு பிறகு வரும் இந்த சூரிய கிரகணத்தை மூட நம்பிக்கை யை தவிர்த்து அதற்கென உரிய சூரிய கண்ணாடி போன்ற பொருளை வைத்து பார்க்கலாம். சூரிய ஒளி கண்ணாடி போன்ற உபகாரங்களோடு இந்த சூர்யா கிரகணத்தை பார்க்கலாம். வெறும் கண்ணில் சூரிய ஒளியை பார்ப்பது நமது கண்களுக்கு பாதிப்பாக அமையும்.
இந்த சூரிய கிரகணம் ஆனது, நிலவு சூரியனை தொடுவது, சூரியனின் விளிம்பு மட்டும் தெரிவது, சூரியனில் இருந்து விலக தொடங்குவது, முழுமையாக சூரியனில் இருந்து விலகுவது, மோட்சம் என ஐந்து படிநிலைகளை கொண்டது.
இதற்கடுத்ததாக சூரிய கிரகணம் 2031ஆம் ஆண்டு மே மாதம் தெரியவரும் என ஆராச்சியாளர்கள் கூறுகின்றனர். அதே போல அது தமிழ்நாட்டில் தெரியவராதம். அது வேறு நாட்டில் தெளிவாக தெரியும் என கூறுகிறார்கள்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…