பெண் காவல் ஆய்வாளரின் அசாத்திய செயலால் தாயும், சேயும் நலம்!
சென்னை, சூளைமேடு காவல்நிலையத்தில் குற்றப்பிரிவு ஆய்வாளராக பணியாற்றி வருகிறார் சித்ரா. இவர் அன்றிரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது அந்த வழியாக ஒரு கர்ப்பிணி பெண் வந்துள்ளர்.
அந்த கர்பிணியும் அதே சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் தான். நிறைமாத கர்ப்பிணியான பானுமதி வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். அவருக்கு பிரசவ வழி ஏற்படவே, மருத்துவமனைக்கு செல்ல சூளைமேடு நெடுஞ்சாலையில் நடந்து சென்றுள்ளார்.
அப்போது அந்த பெண்ணிற்கு பிரசவவழி ஏற்பட, சாலையிலேயே சரிந்து விழுந்துவிட்டார். அதனை அந்த வழியாக சென்ற காவல் ஆய்வாளர் சித்ரா, துரிதமாக செயல்பட்டு, துப்புரவு பெண் தொழிலாளி ஒருவருடன் இணைந்து பிரசவம் பார்த்துள்ளார். அந்த கர்ப்பிணிக்கு ஆண்குழந்தை பிறந்துள்ளது.
காவல் ஆய்வாளரின் இந்த துரித செயலால் தாயும் சேயும் நலமாக இருப்பதை கண்டு மக்கள் ஆய்வாளரை பாராட்டி வருகின்றனர்.