கருணாநிதி சிலை திறப்பு விழா நிறைவு…!டெல்லிக்கு புறப்பட்ட சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி…!
கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்ற பின் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி டெல்லி புறப்பட்டனர்.
திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழா நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி,காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கேரளா, ஆந்திரா மற்றும் புதுச்சேரி முதலமைச்சர் வந்தனர்.
இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி,காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்னை வந்தடைந்த நிலையில் தற்போது சோனிய காந்தி சிலையை திறந்து வைத்தார்.பின்னர் கருணாநிதி சிலை திறப்பு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.இது நிறைவுபெற்ற நிலையில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி டெல்லி புறப்பட்டனர்.