மது குடிக்க பணம் தராததால் 70 வயது தாயை அடித்து கொன்ற மகன் கைது .!

Default Image

செங்கோட்டை மாவட்டத்தில் குடிக்க பணம் தராததால் தனது 70 வயதான தாயை கொன்ற 38 வயது மகன்.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை குளத்து முக்கு கே சி ரோடு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் இவருடைய மனைவி இசக்கியம்மாள் 70வயதான இவருடைய இளையமகன் மாரியப்பன், வயது 38 இசக்கியம்மாள் தனது கவனவரை இழந்த பிறகு கடையில் மீன்களை வைத்து தெருத்தெருவாக கொண்டு சென்று விற்பனை செய்து வந்தார், இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் நலம் சரியில்லாததால் வியாபாரத்திற்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே இருந்து வந்தார் .

மேலும் இவருடைய மகன் மாரியப்பன் முன்பே தனது மனைவியை பிரிந்து சரியாக வேலைக்கு செல்லாமல் மது அருந்தும்  பழக்கம் உண்டு, மது குடிப்பதற்காக தாயிடம் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்த நிலையில் நேற்று மது குடிக்க பணம் கேட்டு உள்ளார் அப்போது தன்னிடம் பணம் இல்லை என்று அவருடைய தாய் இசக்கியம்மாள் கூற இதனால் ஆத்திரமடைந்த மாரியப்பன் வீட்டிலிருந்த கட்டையை எடுத்து தலையில் ஓங்கி எடுத்ததாக கூறப்படுகிறது .

இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த இசக்கியம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் இதனை அடுத்து அங்கிருந்து தப்பி சென்றார் மாரியப்பன். இதுகுறித்து செங்கோட்டையில் உள்ள போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு தகவல் வந்தவுடன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர் , மேலும் இசக்கியம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு செங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள் , அடுத்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தப்பியோடிய மாரியப்பனை கைது செய்தனர்.

இந்த நிலையில் பணம் தராததால் தாயை மகனை அடித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளத

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்