முழு ஊரடங்கை பயன்படுத்தி சில கருப்பாடுகள் செயற்கையாக விலைவாசி ஏற்றத்தை உருவாக்கி உள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், கடந்த இரண்டு வாரங்களாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மீண்டும் 24-ம் தேதியில் இருந்து மேலும் ஒரு வாரம் முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சில கடைகளில் ஊரடங்கை சாதகமாக பயன்படுத்திக் காய்கறிகளை அதிக விலைக்கு விற்பனை செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. இதனையடுத்து இதுகுறித்து தமிழக அரசு ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளது. காய்கறிகளை அதிக விலைக்கு விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எச்சரித்துள்ளது.
இதனையடுத்து, காய்கறி விலை உயர்வை கண்டித்து, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, முழு ஊரடங்கை பயன்படுத்தி சில கருப்பாடுகள் செயற்கையாக விலைவாசி ஏற்றத்தை உருவாக்கி உள்ளனர். காய்கறிகளின் விலையை அதிகரித்து, மக்களுக்கு துரோகம் செய்பவர்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ளதோடு, அதிக விலைக்கு விற்பவர்களை வணிகம் செய்யும் நிலையிலிருந்து நீக்கவேண்டிய நிர்பந்தம் ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை : பெண்கள் பணிபுரியும் அலுவலகங்களில் 'விசாகா கமிட்டி’ அமைக்காதது ஏன்? என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி…
சென்னை : வடகர்நாடக கோவா கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் இன்று காலை (21-05-2025) 0830…
கோவை : கடந்த மே 17-ம் தேதி கோவை மாவட்டம் மருதமலை அடிவாரத்தில் ஒரு தாய் யானையும் அதன் குட்டியும்…
மதுரை : மாநிலம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாகவுள்ள இடங்களுக்கு இடைத்தேர்தல் நடத்த இடைக்காலத் தடை விதித்து, மதுரை ஐகோர்ட்…
சென்னை: கடந்த 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியிடமிருந்து விவாகரத்து கோரி சென்னை…
மும்பை : ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ள ஆட்டத்தில்…