எனது நண்பர்கள் சிலர் இறந்துவிட்டனர்…! தயங்காமல் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்…! – முதலவர் பழனிசாமி

தமிழகத்தில் கொரோனா அதிகரித்து வருவதால், தயங்காமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள் முதல்வர் பழனிசாமி என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த ஓராண்டாக கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் தீவிரமாக பரவி வந்த நிலையில்,தற்போது தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டத்தை தொடர்ந்து, தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வந்தது. கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைந்திருந்தது. தற்போது கொரோன பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது.
தமிழகத்தில், நாளொன்றுக்கு 1,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில், அரசியல் பிரபலங்கள் பலரும் தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ள நிலையில், முதல்வர் பழனிசாமி, ‘தமிழகத்தில் கொரோனா அதிகரித்து வருவதால், தயங்காமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள் என்றும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், எனது நண்பர்கள் சிலர் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டு இறந்து விட்டனர். எனவே, கவனக் குறைவாக இருக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பெரும் சோகம்.! அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ காலமானார்!
March 26, 2025
GT vs PBKS: பேட்டிங்கிலும் பந்து வீச்சிலும் மிரட்டிய பஞ்சாப்.! தோல்வியை தழுவிய குஜராத்.!
March 25, 2025
GT vs PBKS: பொளந்து கட்டிய ஸ்ரேயாஸ் ஐயர்… மிரண்டு போன குஜராத்துக்கு இது தான் டார்கெட்.!
March 25, 2025
பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா காலமானார்.!
March 25, 2025