தமிழகத்தில் மேலும் சில தளர்வுகள்! முதல்வர் பழனிசாமி உத்தரவு!
தமிழகத்தில் மேலும் சில தளர்வுகள் அறிவிப்பு.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிற நிலையில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது தமிழகத்தில் படிப்படியாக தாளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நாளை மறுநாள் முதல் மாநகராட்சிப் பகுதிகளில் சிறிய வழிபாட்டு தலங்களை திறக்க முதலவர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மாவட்ட ஆட்சியர்களின் அனுமதி பெற்று பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், நாளை மறுநாள் முதல் தமிழகம் முழுவதும் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், அரசு வெளியிட்டுள்ள நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.