மதுரை, கோவை, திருச்சி மாவட்டங்களை பிரிக்க வேண்டும்.! பாமக தலைவர் ஜி.கே.மணி கருத்து.!
நிர்வாக வசதிக்காகவும், மக்கள் நலனுக்காகவும் சேலம், திருச்சி, மதுரை, தஞ்சை, கோவை உள்ளிட்ட சில பெரிய மாவட்டங்களை பிரிக்க வேண்டும். – பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி.
நிர்வாக காரணங்களுக்காக பெரிய மாவட்டங்கள் பிரிக்கப்படுவது வழக்கமான ஒன்று தான். ஏற்கனவே , ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, மயிலாடுதுறை போன்ற மாவட்டங்கள் அவ்வாறு பிரிக்கப்பட்டவை தான்.
அப்படி மேலும் சில பெரிய மாவட்டங்களை பிரிக்க வேண்டும் என பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார் . அதாவது, நிர்வாக வசதிக்காகவும், மக்கள் நலனுக்காகவும் சேலம், திருச்சி, மதுரை, தஞ்சை, கோவை உள்ளிட்ட சில பெரிய மாவட்டங்களை பிரிக்க வேண்டும் என அவர் தனது கருத்தை கூறினார்.