அரசியல்வாதிகள் மக்களுக்காக ஆட்சி நடத்தும் முறைக்கு முற்றுபுள்ளி வைத்து, தற்போது தங்களுக்காக ஆட்சி நடத்துகிற நிலையில், இன்றைய அரசியல் நிலைப்பாடு உள்ளது.
கடந்த சில வருடங்களாக மக்கள் தங்கள் உரிமைகளை போராடி தான் பெற்று வருகின்றனர். தனி மனித உரிமைகள் கூட மறுக்கப்பட்டு வருகினறனர். ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு பிரச்சனைகள் தலை தூக்கிய வண்ணம் தான் உள்ளது.
ஜனநாயக தேசத்தில் மக்களின் கருத்துக்களை அரசியல்வாதிகளுக்கு புரிய வைப்பதற்க்கே மக்கள் பல போராட்டங்களை கையில் எடுக்கின்றனர்…!
இன்று மக்கள் தங்களது உரிமைகளை நிலை நாட்ட போராட்டங்களே தீர்வு என்ற நிலைக்கு மக்கள் தள்ளப்படுகின்றனர்.
நெடுவாசல் பகுதியில் தற்போது அரசால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் அந்த நான்கு ஏக்கர் நிலத்தில் இந்த ஹைட்ரோகார்பன்களை எடுப்பதற்குதான் திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகிறது.நெடுவாசல் தவிர இந்தியாவில் 30 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
அதானி வெல்ஸ்பன் எக்ஸ்ப்ளோரேஷன், ஜெம் லெபாரட்டரீஸ் உள்ளிட்ட பெரும் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
ஹைட்ரோகார்பன் திட்டம் என்றால் என பலருக்கு கேள்விகள் எழும்பலாம். ஹைட்ரோ கார்பன் திட்டம் என்பது, ஹைட்ரஜன் மற்றும் கார்பன் கலந்த கலவையை தான் ஹைட்ரோகார்பன் என்கிறோம். இந்த ஹைட்ரோகார்பன் ஆக்சிஜன் உதவியோடு எரிபொருளாக பயன்படுகிறது.
பெட்ரோல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு, நிலக்கரி போன்றவற்றின் ஒட்டுமொத்த வடிவமே ஹைட்ரோகார்பன். இதுவரை இந்த ஹைட்ரோகார்பன் உள்ள 31 இடங்களில் தமிழிகத்தில் நெடுவாசலிலும் ஹைட்ரோகார்பன் இருப்பதாக கண்டறிந்துள்ளனர்.
நெடுவாசலில், 2006-ம் ஆண்டே இந்த பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வடகாடு, வாணக்கண்காடு, கோட்டைக்காடு, கருக்கண்குறிச்சி போன்ற இடங்களில் ஆய்வு பணிகள் நடைபெற்று வருகிறது.
ஹைட்ரோகார்பன் நமது வாழ்வாதாரத்தை செழிக்க பண்ணக்கூடிய ஒரு பொருள் என்றே சொல்லலாம். இந்த திட்டத்தை நெடுவாசல் பகுதியில் மேற்கொள்ளும் போது, அந்த பகுதியில் 21 ஏக்கர் நிலங்கள் உப்பு நிலமாக மாறக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
இதில் அதிகமாக விவசாய மக்கள் தான் பாதிக்கப்படுகின்றனர். சுமார் 6000 பேர் வசிக்கும் அந்த நெடுவாசல் நிலங்களில் ஒவ்வொரு ஏக்கரும் தற்போது குறைந்தபட்சம் நான்கு மூட்டை விகிதம் நெல் தருகின்றன. நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்தின் வருடாந்திர ஜீவனாம்சத்திற்கு போதுமானது அது.
இவை மக்களின் வாழ்வாதாரம் அனைத்தையும் அழித்து, அரசியல்வாதிகள் தங்களது சொந்த வசதிக்காக பயன்படுத்துகின்றனர்.
இன்று மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை காத்துக் கொள்வதற்கு போராட்டங்களை தான் முன்னெடுக்கின்றனர். வெற்றி கிட்டாவிட்டாலும், விடாமுயற்சியுடன் போராடி வருகின்றனர்.
2017-ம் ஆண்டில் 21 நாட்களாக தொடர்ந்து அயராது போராட்டத்தில் ஈடுபட்டனர் பொதுமக்கள். போராட்டத்தை உடனடியாக கைவிட வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் கணேசன் மற்றும் சார் ஆட்சியர் அம்ரித் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டாலும், அவற்றை அரசியலவாதிகள் தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி தடுத்து நிறுத்துகின்றனர். போராடினால் அவர்கள் திவீரவாதியாக கருதப்படுகின்றன.
பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் கூடும், ஆனால் தற்போது பணம் எங்கயோ அங்கே அரசியல்வாதிகள் கூடுகின்றனர். பணம் எங்கு கிடைக்கிறதோ அங்கு தான் அவரகள் ஆதரவும் அதிகரிக்கிறது.
முட்டாள்கள் உள்ள வரை
அயோக்கியர்கள் ஆட்சி செய்வார்கள்…!
இது தான் ஜனநாயகம்…!!!
என்று கூறிய பெரியாரின் இந்த பொன்மொழிபடியே இன்றைய ஜனநாயகம் உள்ளது. அரசியல்வாதிகளின் சதிகளை களைய நாம் முற்படாவிட்டால் நம் தேசம் பாலைவனமாக மாறி விடும். இந்த களைகளை பிடுங்க நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் நமது வாக்கு. பணத்திற்கு ஆசைப்பட்டு, சுயநல அரசியல்வாதிகளை தேர்ந்தெடுக்காமல், மக்களுக்காக ஆட்சி நடத்தும் அரசியல்வாதிகளை தேர்ந்தெடுப்போம்.
விரைவில் நமது போராட்டங்களுக்கு தீர்வு கிடைத்து, நமது உரிமையை நிலைநாட்டி, நமது தேசம் விரைவில் விடியலை காணும் என்ற நம்பிக்கையோடு சதி விதைத்தவர்களுக்கு பாடம் புகட்டுவோம்.
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…
பெர்த் : பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ்…