கட்சியில் சில வருந்தத்தக்க நிகழ்வுகள் நடைபெறுகின்றன.! திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேதனை.!
கட்சியின் தலைமையை மீறி சில வருந்தத்தக்க செயல்கள் நடைபெறுகின்றன. இதனை மாவட்ட செயலாளர்கள் தான் தடுக்க வேண்டும் என குறிப்பிட்டார். – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை.
ஆளும் திமுக கட்சியின் மாநில செயலாளர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமை தங்கினார். திமுக முக்கிய நிர்வாகிகள் டி.ஆர்.பாலு, கே.என்.நேரு, பொன்முடி என பலர் கலந்துகொண்டனர்.
கலைஞர் பிறந்தநாள் :
இதில் கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆண்டுதோறும் கலைஞர் பிறந்தநாளை பிரமாண்டமாக கொண்டாடவேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும், கட்சியின் தலைமையை மீறி சில வருந்தத்தக்க செயல்கள் நடைபெறுகின்றன. இதனை மாவட்ட செயலாளர்கள் தான் தடுக்க வேண்டும் என குறிப்பிட்டார்.
பட்ஜெட் நலத்திட்டங்கள் :
அடுத்ததாக, கட்சி நிர்வாகிகள் கட்சி கெட்ட பெயர் ஏற்படும் வகையில் நடந்துகொள்ள கூடாது எனவும் கேட்டுகொண்டார். மேலும், பட்ஜெட் நலத்திட்டங்கள் குறித்து மக்களிடம் கொண்டு செல்லுங்கள் என கேட்டுக்கொண்டார்.
100 வாக்காளர்களுக்கு ஒரு நிர்வாகி :
பூத் கமிட்டியை பலப்படுத்த வேண்டும் எனவும், ஒரு சட்டமன்ற தொகுதிக்கு ஒரு பொறுப்பாளர் எனும் வீதம் நிர்வாகிகள் நியமிக்கப்பட உள்ளனர் என கூறினார். 100 வாக்காளர்களுக்கு ஒரு நிர்வாகி வீதம் செயல்பட வேண்டும் கேட்டுக்கொண்டார்.
மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் :
கட்சி நிர்வாகிகள் பொது வெளியில் கோபப்படகூடாது, பார்த்து பேச வேண்டும் எனவும் செல்போன் கேமிரா இருப்பதை அறிந்து பேச வேண்டும் எனவும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.