மக்களுக்கு சேவை செய்ய விரும்புபவர்களுக்கு பாஜக வாய்ப்பளிக்க தயாராக இருக்கிறது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கர்நாடகா மேகதாது அணை கட்டுவதற்கு எதிராக தஞ்சையில் ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில்,கடந்த 6ம் தேதி 3 நாள் பயணமாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லி பயணம் மேற்கொண்டார். டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அண்ணாமலை, அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பாஜகவில் இணைகிறாரா? என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
அதாவது, கட்சிக்குள் பிரச்சனை இருக்கும்போது சிலர் பாஜகவுக்கு வருகிறார்கள். எந்த கட்சியாக இருந்தாலும் பிரதமர் மோடியின் சித்தாந்தத்தையும், தமிழக அரசியலில் ஒரு நல்ல மாற்றத்தை கொடுக்க வேண்டும் என்று நினைக்கக்கூடிய, எந்த தலைவர்களாக இருந்தாலும் பாஜகவில் இணையலாம். இணைந்த அனைத்து தலைவர்களும் தேசியம் என்ற சித்தாந்தத்தை அடிப்படையாக கொண்டுள்ளனர்.
ஒரு அரசியல் கட்சியில் யூகங்களுக்கு பதில் அளிக்க முடியாது. அது நடக்கட்டும் பதில் கூறுகிறேன் என தெரிவித்தார். அரசியலில் ஒரு இடத்தில் இருக்க வேண்டும் என்று அவசியம் கிடையாது. மக்களுக்கு சேவை செய்ய விரும்புபவர்களுக்கு பாஜக வாய்ப்பளிக்க தயாராக இருக்கிறது. பாஜகவில் யாரு வந்தாலும் மகிழ்ச்சிதான். முக்கியமாக பாஜகவின் சித்தாந்த அடிப்படையில் வரவேண்டும் என கூறினார்.
இதனிடையே, அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திடீரென இன்று விமானம் மூலம் டெல்லி சென்றுள்ளார். டெல்லி சென்றுள்ள ராஜேந்திர பாலாஜி பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது என்பது குறிப்பிடப்படுகிறது.
சென்னை : பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்வோர் ரயில், பேருந்துகளில் டிக்கெட் கிடைக்காமல் அவதியுறுவதுண்டு. அவர்கள், அரசுப்பேருந்துகளில்…
சென்னை : கடந்த நவ-14 அன்று 3D தொழில்நுட்பத்தில் பெரும் பொருட்செலவில் உருவான கங்குவா திரைப்படமானது தமிழ், மலையாளம், இந்தி,…
ரியோ டி ஜெனிரோ : 19-வது ஜி20 உச்சி மாநாடானது இன்று பிரேசில் தலைநகரான ரியோ டி ஜெனிரோவில் தொடங்குகிறது.…
சென்னை : மணிப்பூரில் ஏற்பட்ட கலவரத்தில் பலி எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே 5…
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், காலை 10 மணி வரை டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும்…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில் 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதுதான் உலகமே எதிர்பார்த்துக்…