சென்னையில் சொமாட்டோ நிறுவனத்திற்கு ரூ.1,00,000அபராதம்..!

Default Image

தற்போது தமிழகத்தில் பருவமழை பெய்து வருவதால் டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது. இதனால் டெங்கு பரவாமல் இருக்க பல முன்னெச்சரிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு ஆகியவை தமிழகம் அரசு சார்பில் செய்யப்பட்டு வருகிறது.
தேங்கிக்கிடக்கும் மழை நீரால் உற்பத்தியாகும் கொசுக்கள் மூலம் டெங்கு பரவ வாய்ப்புள்ளதால் அதிகாரிகள் தமிழகத்தின் பல இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சொமாட்டோ நிறுவனத்தில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் கொசு உற்பத்தியாகும் வகையில் இருந்ததால் அந்த நிறுவனத்திற்கு சென்னை மாநகராட்சி ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி சுகாதாரத் துணை ஆணையர் மதுசூதன் ரெட்டி கூறுகையில், சேத்துப்பட்டு பகுதியில் உள்ள சமூக நிறுவனத்தில் அறுபத்தி பயன்படுத்தப்படாத டெலிவரி டைகர் மாடியில் வைக்கப்பட்டுள்ளன அதில் அதை பொய் ஆய்வு செய்தபோது உற்பத்தியாகும் கொசுக்கள் உருவாகும் சூழல் இருந்ததால் அந்த நிலத்தில் ஒரு லட்சம் அபராதம் விதித்து அதை அந்த நிறுவனம் ஒப்புக்கொண்டது.
அத்துடன் மேலும் அவர்கள் சுத்தமாக வைத்துக்கொள்வதாகவும் கூறியுள்ளனர்.மக்களின் நலன் கருதி பல இடங்களில் சோதனை எடுத்து வருகிறோம். ஒரு இடத்தில் கொசு உற்பத்தி ஆகி விட்டால் அந்த இடத்திலிருந்து 300 மீட்டர் வரை உள்ளவர்கள் பாதிக்கப்படுவர்கள் என  தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்