ஆவடி ராணுவ தொழிற்சாலையில் சக வீரரை சுட்டு கொன்ற வீரர்.!
- திரிபுரா மாநிலத்தை சேர்ந்த நீலம்சின்ஹா என்பவர் சில நாட்களாக மன உளைச்சலால் இருந்ததாக கூறப்படுகிறது.
- பாதுகாப்பு வீரர்கள் தூங்கிக் கொண்டிருந்த அறையை நோக்கி நீலம்சின்ஹா துப்பாக்கியால் சரமாரி சுட்டார்.இதில் கிரிஜெஷ் குமார் என்ற சக வீரர் மீது 6 குண்டுகள் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
சென்னை ஆவடியில் மத்திய அரசுக்கு சொந்தமான கனரக வாகன தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் வடமாநிலங்களை சேர்ந்தவர்கள் பலர் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் திரிபுரா மாநிலத்தை சேர்ந்த நீலம்சின்ஹா என்பவர் சில நாட்களாக மன உளைச்சலால் இருந்ததாக கூறப்படுகிறது.
இதையெடுத்து இன்று அதிகாலை பாதுகாப்பு வீரர்கள் தூங்கிக் கொண்டிருந்த அறையை நோக்கி நீலம்சின்ஹா துப்பாக்கியால் சரமாரி சுட்டார். இதில் தூங்கிக் கொண்டிருந்த இமாச்சல பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த கிரிஜெஷ் குமார் என்ற சக வீரர் மீது 6 குண்டுகள் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
மேலும் தனது துப்பாக்கியை கொண்டு மற்ற வீரர்களை சுடப் போவதாக மிரட்டினர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த பாதுகாப்புத் துறை அதிகாரி துப்பாக்கியை கீழே போட்டுவிட்டு சரணடையுமாறு கூறினார்.
சரணடையவில்லை என்றால் சுட்டு தான் பிடிக்கப்படும் என கூற உடனடியாக துப்பாக்கியை கீழே போட்டுவிட்டு சரணடைந்தார். இறந்த கிரிஜெஷ் குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து அதிகாரிகள் நிலாம்பரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.