லடாக் தாக்குதலில் வீர மரணமடைந்த பழனியின் உடல் மதுரை வந்தடைந்தது.!
வீரமரணமடைந்த பழனியின் உடல் ராணுவ விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்துள்ளது.
லடாக்கின் கால்வன் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.இதில் தமிழகத்தில் ராமநாதபுரத்தை சேர்ந்த பழனி என்ற ராணுவ வீரர், அந்த தாக்குதலில் வீரமரணம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் வீரமரணமடைந்த பழனியின் உடல் ராணுவ விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்துள்ளது. உயர் அதிகாரிகள் மரியாதை செலுத்திய பின்னர் அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படுகிறது.