மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் டிசம்பா் 25-ம் தேதி புதன்கிழமை இரவு இராக்காலத்தில் திருவனந்தல், விளா பூஜை, காலசந்தி ஆகிய பூஜைகள் நடத்தப்படும். பின்னர் சூரிய கிரகணத்தை முன்னிட்டு 26-ம் தேதி காலை 6.10 மணி முதல் பகல் வரை நடை அடைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பின்பு இதில், சூரிய கிரகணம் இடைப்பட்ட காலத்தில் காலை 9.36 மணிக்கு தீா்த்தம் கொடுக்கப்பட்டு, அம்மன், சுவாமிக்கு அபிஷேகம் நடைபெறும். மோட்ச காலம் காலை 11.21 மணிக்கு முடிந்தவுடன், 11.30-க்கு திருக்கால சந்தி, உச்சிக்கால பூஜைகள் நடைபெற்று, நண்பகல் 12 மணிக்கு நடை திறக்கப்பட்டு, பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவா். அன்றைய தினம் பிற்பகல் 1 மணிக்கு நடை சாத்தப்படும்.
மேலும், மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலின் உபகோயில்களான அனைத்துக் கோயில்களிலும் மேற்கண்டவாறு நடை சாத்தப்படும் என்று, கோயில் இணை ஆணையா் நா. நடராஜன் தெரிவித்துள்ளாா்.
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…
புது டெல்லி : மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது வலுவடைந்துள்ளது.மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…