சூரியனுக்கும் பூமிக்கும் இடையே ஒரே நேர்கோட்டில் நிலவு வருகையில் நிலவின் நிழல் பூமியின் மீது விழும் இந்த நிகழ்வுகள் சூரிய கிரகணம் என அழைக்கப்படுகிறது. இன்று காலை 8.07 மணி முதல் 11.16 வரை 3மணிநேரம் சூரிய கிரகணம் நிகழ்ந்தது.
தமிழ்நாட்டில் ஊட்டி, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை ஆகிய ஊர்களிலும். அதே போல கேரளா கோழிக்கூடு பகுதியிலும், கர்நாடக மங்களூரு பகுதியிலும் இந்த கிரகணம் தெரியவரும் என கூறப்பட்டது.
அதேபோல, தமிழகத்தில் தமிழ் அறிவியல் இயக்கம் சார்பாக கடலூர் வெள்ளி கடற்கரையில் சூரிய கிரகணத்தை பார்க்க சிற்பபு ஏற்பாடு செய்யப்பட்டது. இதே போல தமிழகத்தில் 10 இடங்களுக்கும் மேலாக சூரிய கிரகணத்தை பொதுமக்கள் மாணவர்கள் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த சிறப்பு வாய்ந்த நெருப்பு வளைய சூரிய கிரகணம் கோவை, ஈரோடு, திருப்பூரில் 90 சதவீதத்திற்க்கும் மேலாக சூரிய கிரகணம் தென்பட்டது. சென்னை, காஞ்சிபுரம், கன்னியகுமாரி, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய ஊர்களில் பகுதி நேர சூரிய கிரகணம் தென்பட்டது. காங்கேயம், ஊட்டி, அவிநாசி, சென்னிமலை, திண்டுக்கல் ஆகிய இடங்களில் 3 நிமிடங்கள் வரை சூரிய கிரகணம் தென்பட்டது.
சிவகங்கை,காரைக்குடியில் 2 நிமிடங்கள் வரை தென்பட்டது. ஈரோட்டில் 1.20 நிமிடமும், மதுரையில் 20 வினாடியும் சூரிய கிரகணம் தென்பட்டது. 14 ஆண்டுக்கு ஒரு முறை வரும் இந்த வளைவு வடிவிலான சூரிய கிரகணம் காணப்படும்.
தமிழகத்தில் பல இடங்களில் தென்பட்ட இந்த நெருப்பு வளைய சூரிய கிரகணத்தை பொதுமக்கள், மாணவர்கள் என பலர் அதற்குரிய கண்ணாடிகள், டெலஸ்கோப் ஆகிய கருவிகள் மூலம் சூரிய கிரகணத்தை பார்த்தனர்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…