எந்தெந்த ஊர்களில் எவ்வளவு நேரம் தெரிந்தது? சூரிய கிரகணம் சிறப்பு நிகழ்வு!

Default Image
  • சூரிய கிரகணமானது காலை 8.07 முதல் 11.16 வரை நிலவியது.
  • இந்த நெருப்பு வளைய சூரிய கிரகணமானது 14 ஆண்டுகளுக்கு ஒரு முறை தெரியவரும்.

சூரியனுக்கும் பூமிக்கும் இடையே ஒரே நேர்கோட்டில் நிலவு வருகையில் நிலவின் நிழல் பூமியின் மீது விழும் இந்த நிகழ்வுகள் சூரிய கிரகணம் என அழைக்கப்படுகிறது. இன்று காலை 8.07 மணி முதல் 11.16 வரை 3மணிநேரம் சூரிய கிரகணம் நிகழ்ந்தது.

தமிழ்நாட்டில் ஊட்டி, கோவை, திருப்பூர், ஈரோடு,  கரூர், திண்டுக்கல், சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை ஆகிய ஊர்களிலும். அதே போல கேரளா கோழிக்கூடு பகுதியிலும், கர்நாடக மங்களூரு பகுதியிலும் இந்த கிரகணம் தெரியவரும் என கூறப்பட்டது.

அதேபோல, தமிழகத்தில் தமிழ் அறிவியல் இயக்கம் சார்பாக கடலூர் வெள்ளி கடற்கரையில் சூரிய கிரகணத்தை பார்க்க சிற்பபு ஏற்பாடு செய்யப்பட்டது. இதே போல தமிழகத்தில் 10 இடங்களுக்கும் மேலாக சூரிய கிரகணத்தை பொதுமக்கள் மாணவர்கள் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த சிறப்பு வாய்ந்த நெருப்பு வளைய சூரிய கிரகணம் கோவை, ஈரோடு, திருப்பூரில் 90 சதவீதத்திற்க்கும் மேலாக சூரிய கிரகணம் தென்பட்டது. சென்னை, காஞ்சிபுரம், கன்னியகுமாரி, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய ஊர்களில் பகுதி நேர சூரிய கிரகணம் தென்பட்டது.  காங்கேயம், ஊட்டி, அவிநாசி, சென்னிமலை, திண்டுக்கல் ஆகிய இடங்களில் 3 நிமிடங்கள் வரை சூரிய கிரகணம் தென்பட்டது.

சிவகங்கை,காரைக்குடியில் 2 நிமிடங்கள் வரை தென்பட்டது. ஈரோட்டில் 1.20 நிமிடமும்,  மதுரையில் 20 வினாடியும் சூரிய கிரகணம் தென்பட்டது. 14 ஆண்டுக்கு ஒரு முறை வரும் இந்த வளைவு வடிவிலான சூரிய கிரகணம் காணப்படும்.

தமிழகத்தில் பல இடங்களில் தென்பட்ட இந்த நெருப்பு வளைய சூரிய கிரகணத்தை பொதுமக்கள், மாணவர்கள் என பலர் அதற்குரிய கண்ணாடிகள், டெலஸ்கோப் ஆகிய கருவிகள் மூலம் சூரிய கிரகணத்தை பார்த்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்