மாவட்டத்திற்கு ஒரு ‘தோழி விடுதி’.! சட்டப்பேரவையில் அமைச்சர் கீதா ஜீவன் தகவல்.!
![Minister Geetha Jeevan](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2023/10/Minister-Geetha-Jeevan.jpg)
தமிழக சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தொடர் நேற்று தொடங்கி இன்று இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது. நேற்றைய கூட்டத்தில் காவிரி விவகாரம் தொடர்பாக தனித்தீர்மானம் கொண்டுவரப்பட்டு தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றபட்டது.
இன்றைய கூட்டத்தொடரில் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதி தொடர்பான கோரிக்கைகள், பொதுவான கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர் . அதற்கு உரிய அமைச்சர்கள் பதில் கூறி வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தொகுதி அதிமுக எம்எல்ஏ மரகதம் பெண்கள் விடுதி குறித்த கோரிக்கையை முன்வைத்தார்.
அதிமுக எம்எல்ஏ மரகதம் கூறுகையில், மதுராந்தகம் பகுதியில் தொழிற்பேட்டைகள் அதிகமாக இருக்கிறது என்றும், அதில் பெண்கள் வெளியூரில் இருந்து பணியாற்றி வருகிறார்கள் அவர்கள் தங்குவதற்கு உரிய விடுதி வசதியை அரசு ஏற்படுத்தி தரவேண்டும் என கோரிக்கை வைத்தார்.
36 இஸ்லாமிய கைதிகள் விடுதலை… இபிஎஸ் தீர்மானம்.! முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில்.!
இதற்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துரை அமைச்சகர் கீதா ஜீவன் பதில் கூறுகையில் , செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தொகுதியில் மொத்தம் 2.75 மக்கள் தொகை உள்ளது . இதில் 1.37 லட்சம் பெண்கள். மதுராந்தகத்தில் மொத்தம் 95 தொழிற்சாலைகள் உள்ளன. அதில் 678 பெண்கள் வேலை செய்து வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர், துரைப்பாக்கம் பகுதியில் வேலை செய்யும் பெண்கள் நலன் கருதி 50 படுக்கைகள் கொண்ட அரசு பெண்கள் விடுதி அமைக்கப்பட்டுள்ளன. அதே போல கூடுவாஞ்சேரியில் 120 படுக்கைகள் கொண்ட விடுதியை தமிழநாடு மகளிர் விடுதி கட்டியுள்ளது. அதனை 13.7.2023 அன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தாம்பரத்தில் 420 படுக்கைகள் கொண்ட பெண்கள் விடுதி முடியும் தருவாயில் உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 15 தனியார் மகளிர் விடுதி அரசு அனுமதி பெற்று இயங்கி வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் தோழி விடுதி அமைக்கப்பட வேண்டும் என தமிழக முதல்வர் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார்.
ஏற்கனவே அடையாறு, விழுப்புரம் , பெரம்பலூர், தஞ்சாவூர், நெல்லை ஆகிய பகுதிகளில் சீரமைக்கபட்ட விடுதிகள் திறக்கப்பட்டுள்ளன. அடுத்ததாக திருவண்ணாமலை, கூடுவாஞ்சேரி, தாம்பரம், ஓசூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் தோழி மகளிர் விடுதி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும் அமைச்சர் கீதா ஜீவன் சட்டப்பேரவையில் தெரிவித்து இருந்தார்.