காற்றில் பறந்த சமூக இடைவெளி .! மதுரையில் இ-பாஸ் பெற குவிந்த மக்கள்.!
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இ-பாஸ் பெற பொதுமக்கள் குவித்தனர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கு தமிழகத்திலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கு அமலில் உள்ளதால் தேவையின்றி பொதுமக்கள் வாகனங்களில் வெளியே சுற்றுவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இதையும் மீறி வருபவர்களுக்கு அபராதம், வழக்கு பதிவு, வாகனங்கள் பறிமுதல் போன்ற நடவடிக்கைகளை போலீசார் எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், மதுரையில் வாகனங்கள் வெளியில் வர மாவட்ட ஆட்சியரிடம் அடையாள அட்டை பெற்றால் மட்டுமே வெளியில் வரமுடியும் என காவல்துறை அறிவித்ததால் இ-பாஸ் பெற மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குவித்தனர்.
ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பொதுமக்களில் பலர் சமூக இடைவெளி விதிகளை கடைப்பிடிக்காமலும் , பலர் முககவசம் அணியாமலும் இருந்தனர்.
அவர்களை கட்டுப்படுத்த போலீசார் குவிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து அதிகாரிகளின் உத்தரவின்படி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாசல் மூடப்பட்டது.