சமூக ஊடக குற்றங்களை தடுக்க காவல்துறையில் “சமூக ஊடகக் குழுக்கள்”அமைப்பு..! – டிஜிபி
சமூக வலைதளங்களில் வதந்திகளை பரப்புவோரை கண்டுபிடிக்க காவல்துறையில் “சமூக ஊடகக் குழுக்கள்” அமைப்பு.
சமூக ஊடக குற்றங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இருப்பினும், நாளுக்கு நாள் சமூக ஊடக குற்றங்கள் நடந்த வண்ணம் தான் உள்ளது.
இந்த நிலையில், சமூக வலைதளங்களில் வதந்திகளை பரப்புவோரை கண்டுபிடிக்க காவல்துறையில் “சமூக ஊடகக் குழுக்கள்” அமைக்கப்பட்டுள்ளதாகவும், சென்னை உட்பட 9 மாநகரங்களிலும், 37 மாவட்டங்களிலும் சைபர்கிரைம் தொழில்நுட்பம் அறிந்த சமூக ஊடக குழுக்கள் உருவாக்கபட்டுள்ளதாகவும் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.