தவறான பிரச்சாரத்தை தடுக்க சமூக ஊடக சிறப்பு மையம் – தமிழக அரசு அறிவிப்பு
தமிழக சட்டப்பேரவையில் இன்று 2022-23-ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் முழுமையான பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அப்போது பட்ஜெட் உரையில் பேசிய நிதியமைச்சர், சமூக ஊடகங்களில் தவறான பிரச்சாரத்தை தடுக்க சமூக ஊடக சிறப்பு மையம் அமைக்கப்படும் என அறிவித்தார்.
போதை பொருட்களை ஒழிக்க அரசு தொடர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. சமூக வலைத்தளங்களில் ஏற்படும் குற்றங்களை தடுக்க சமூக ஊடக சிறப்பு மையம் அமைக்கப்படும். சமூக ஊடகங்களில் செய்யப்படும் தவறான பரப்புரைகளின் விளைவாக அதிகரிக்கும் குற்றச்செயல்களை தடுத்திட சமூக ஊடக சிறப்பு மையம் காவல்துறையில் அமைக்கப்படும் என தெரிவித்தார்.