இணையத்தில் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை.! முழுவீச்சில் களமிறங்கிய சமூக ஊடக குழு.!

Default Image

இணையம் வாயிலாக பரப்பப்படும் பொய்யான வதந்திகள், குற்ற சம்பவங்களை தடுக்க சமூக ஊடக குழு உருவாக்கப்பட்டுள்ளது. என டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். 

சமூக வலைதளத்தில் வதந்திகள் பரப்புவது மற்றும் தனிநபர் தாக்குதல் தற்போது அதிகரித்து உள்ளன. அவற்றை தடுக்கவே தற்போது காவல்துறை சார்பில் மாநகர, மாவட்ட அளவில் சமூக ஊடக குழு என்ற புதிய பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் மூலம் சமூக வலைதளங்கள் கண்காணிக்கப்பட்டு உண்மைக்கு புறம்பான தகவல்கள் பரவுவதை இதன் மூலம் தடுக்கப்படும்.மேலும், அது குறித்த நடவடிக்கைகள் விரைவாக எடுக்கப்படும் எனவும் தலைமை டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார்.

ட்விட்டர், பேஸ்புக், யூடியூப் போன்ற தளங்களில் பொய்யான தகவல்கள் பதிவு செய்து வதந்திகளை பரப்பி அதன் மூலம் சமூகத்தில் குழப்பம், மோதல் , கலவரத்தை உண்டு செய்யும் நபர்களை கூர்ந்து கவனிக்க வேண்டிய அவசியம் தற்போது எழுந்துள்ளது.

மேலும், இணையத்தில் பாலியல் குற்றங்கள், போதை பொருள் விற்பனை, பண மோசடி போன்ற சைபர் குற்றங்களில் ஈடுபடுவோரை விரைந்து கண்டுபிடிப்பதும் தற்போது அவசியமாகியுள்ளது. அதன் காரணமாகவே, சென்னை உள்ளிட்ட 9 மாநகரங்கள் 37 மாவட்டங்களில் 203 காவலர்கள் கொண்ட சமூக ஊடக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கணினி மற்றும் சைபர் தடய அறிவியலில் தேர்ச்சி பெற்ற காவலர்கள் இதில் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளனர். சைபர் பிரிவு காவலர் கண்காணிப்பாளர் தலைமையின் கீழ் இக்குழு இயங்கும். இந்த குழுக்கள் மூலம் இணையத்தில் உலவும் பொய்யான தகவல்களை ஆரம்பத்திலேயே கண்காணித்து அவற்றை முடக்குவது, அத்தகைய பதிவுகளை நீக்குவது, அந்த சமூக ஊடக கணக்குகளை தடை செய்வது, விரைவாக குற்ற வழக்குகள் பதிவு செய்வது ஆகிய பணிகளில் துரிதமாக நடவடிக்கை மேற்கொள்வது போன்ற பணிகளில் இந்த குழு செயல்படும்.

சமூகத்தில் சாதி, மத, அரசியல் மோதல்களை தடுத்து சட்டம் ஒழுங்கை பராமரிக்க இக்குழு உதவும் என டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்