சமூக நீதி என்பது பெயரளவில் விளம்பரத்திற்காக இருந்தால் மட்டும் போதாது – அண்ணாமலை

Default Image

சமூக நீதி என்பது பெயரளவில் விளம்பரத்திற்காக இருந்தால் மட்டும் போதாது, அது செயல்பாட்டிலும் இருக்கவேண்டும் என அண்ணாமலை ட்வீட். 

சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் வளாகத்தில் வாரக் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுக்க வந்த நரிக்குறவ சமுதாயத்தைச் சேர்ந்த சுமார் 50 சகோதர சகோதரிகளை இருக்கை இருந்தும் தரையில் அமர செய்ததாக நேற்று செய்திகள் வெளியானது.

இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள், இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் வளாகத்தில் வாரக் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுக்க வந்த நரிக்குறவ சமுதாயத்தைச் சேர்ந்த சுமார் 50 சகோதர சகோதரிகளை இருக்கை இருந்தும் தரையில் அமரச் செய்த அவலம் நிகழ்ந்துள்ளது.

சமூக நீதி என்பது பெயரளவில் விளம்பரத்திற்காக இருந்தால் மட்டும் போதாது, அது செயல்பாட்டிலும் இருக்கவேண்டும் என்பதையே இந்த சம்பவம் உணர்த்துகிறது. பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற நரிக்குறவர்களின் நீண்ட கால கோரிக்கையைத் பாஜக முன்னெடுத்துச் செல்லும்.’ என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்