சமூக அநீதி தேர்வுகளில் தொடர்கிறது – திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்!
சமூக அநீதி தேர்வுகளில் தொடர்கிறது என திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர், மத்திய அரசு பணிகளிலும் பொதுத்துறை நிறுவனங்களிலும் சேர்ந்து வேலை செய்வதற்கு தடைகளை உண்டுபண்ணி இட ஒதுக்கீட்டுக் கொள்கைகளை இல்லாமல் தகர்தெறியக்கூடிய தமிழக அரசின் செயல் கண்டனத்துக்குரியது என கூறிய மு க ஸ்டாலின் அவர்கள், 10 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கி உச்ச நீதிமன்றத்தில் விரைவில் நடத்த வேண்டுமெனவும் கூறியுள்ளார்.
இதனை தாமதப்படுத்தி வரக்கூடிய மத்திய பாஜக அரசு முழுவதும் இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு எதிரானது எனவும் கூறியுள்ளார். மேலும் எஸ்பிஐ தேர்வு, வங்கி பணியாளர் தேர்வு ஆகிய தேர்வுகளில் தொடர்ந்து சமூக அநீதி இழைக்கப்பட்டு வருவதாகவும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.