சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
டிராஃபிக் ராமசாமி,சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் உடனே அங்கு வந்து போக்குவரத்தைச் சரி செய்வதை வழக்கமான பணியாகக் கொண்டிருந்தார்.இதனால்தான் ராமசாமிக்கு, டிராஃபிக் ராமசாமி என்ற பெயர் வந்தது.பொதுமக்கள் நலன் கருதி,பல்வேறு பொதுநல வழக்குகளைத் தொடர்ந்து,அவ்வழக்குகளில் வழக்கறிஞர் துணையின்றி தானே வாதாடி பல நல்ல செயல்கள் செய்து வந்தார்.எனவே,இவரது வாழ்க்கை வரலாறு திரைப்படமாகவே எடுக்கப்பட்டுள்ளது.ராமசாமி அந்த அளவிற்கு சமூக பொதுநலனில் அக்கறைக் கொண்டவர்.
இதனையடுத்து தமிழக சட்டமன்ற தேர்தலில்,சோழிங்கநல்லூர் தொகுதியில் டிராஃபிக் ராமசாமி சுயேட்சையாக போட்டியிட்டார்.அதனால்,பிரச்சாரத்தில் முழுமையாக ஈடுபட்டு வந்த டிராபிக் ராமசாமிக்கு கடந்த ஏப்ரல் 4-ந்தேதி திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது.இதனைத் தொடர்ந்து,அவருக்கு வீட்டிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில்,இன்று உடல்நிலை இன்னும் மோசமானதன் காரணமாக சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார்.அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் ராமசாமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.மேலும்,கொரோனா பரிசோதனையும் டிராஃபிக் ராமசாமிக்கு மேற்கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
லக்னோ : ஐபிஎல்2025-65 வது போட்டி லக்னோவில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH)…
சென்னை : தவெக-விற்கு ஆலோசகராக செயல்பட்டு வந்த ஐஆர்எஸ் அதிகாரி அருண்ராஜ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதாவது, தமிழக…
லக்னோ : லக்னோவில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிகளுக்கு இடையே நடைபெற்று…
அமெரிக்கா: கூகுள் நிறுவனம் Veo 3 என்ற பெயரில் Al தொழில்நுட்பத்தின் அடுத்த கட்ட வீடியோ கருவியை அறிமுகம் செய்து…
நீலகிரி : தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே துவங்குவதால், மே 25 மற்றும் 26-ம் தேதி கோவை, நீலகிரி ஆகிய 2…
லக்னோ : ஐபிஎல் 2025 லக்னோவில் இன்று இரவு 7.30 மணிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ்…