சாலையில் வீணாகும் தண்ணீரில் சோப்பு போட்டு குளித்து நூதன போராட்டத்தில் ஈடுப்பட சமூக ஆர்வலர்.!
- திருப்பூர் அவிநாசி சாலையில் உள்ள குடிநீர் குழாய் உடைந்து ஏராளமான தண்ணீர் வீணாவதை கண்டித்து பொதுமக்கள் மாநகராட்சியிடம் பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.
- இந்நிலையில் மாநகராட்சியை கண்டிக்கும் வகையில், அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் சந்திரசேகர் என்பவர், குழாய் உடைந்து சாலையில் வீணாகும் தண்ணீரில் குளித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.
நாட்டில் தண்ணீர் பிரச்னை அதிகரித்து கொண்டே வரும் நிலையில், மக்கள் ஆகிய நாம் இருக்கும் தண்ணீரை சரியாக பராமரிக்காமல் சற்று அலட்சியமாக இருக்கின்றோம். பல கிராமங்களில் சாலைகளிலோ, தெருக்களிலோ குடிநீர் குழாய்களில் தண்ணீர் பிடித்துவிட்டு அதை அடைக்காமல் செல்லவது மற்றும் நிலத்தடியில் வரும் தண்ணீர் பைப்புகள் மற்றும் குடிநீர் குழாய்கள் உடைந்து தண்ணீர் வீணாக சாலையில் தேங்கி நிற்பது, அதை சரி செய்ய பஞ்சாயித்து உறுப்பினர்கள் மற்றும் நகராட்சி, மாநகராட்சி தாமதப்படுத்துவதால் தண்ணீர் வீணாக போகிறது. மேலும் இதனால் பல விதமான நோய்கள் மக்களிடம் பரவுகிறது. இதுகுறித்து மக்கள் மற்றும் சமூக அக்கறை கொண்டனவர்கள் தண்ணீர் வீணாவதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவார்கள்.
அந்த வகையில் திருப்பூர் மாவட்டம் அவிநாசி சாலையில் உள்ள குடிநீர் குழாய் உடைந்து ஏராளமான தண்ணீர் சாலையில் வீணாவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் மாநகராட்சியிடம் பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில் மாநகராட்சியை கண்டிக்கும் வகையில், அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் சந்திரசேகர் என்பவர், குழாய் உடைந்து சாலையில் வீணாகும் தண்ணீரில் குளித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் சாலையில் வீணாகும் தண்ணீரில், ஒருவர் சோப்புப் போட்டு குளித்ததை அந்த வழியே சென்றவர்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து சென்றனர்.