மக்கள் மற்றும் தொண்டர்களின் நலனை கருத்தில் கொண்டே இதுவரை எனது முடிவுகள் இருந்தது – துணை முதல்வர்!
மக்கள் மற்றும் தொண்டர்களின் நலனை கருத்தில் கொண்டே இதுவரை எனது முடிவுகள் இருந்தது என துணை முதல்வர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வர கூடிய நிலையில், கடந்த சில நாட்களாகவே அதிமுக கட்சியில் சில சர்ச்சைகள் எழுந்து வந்த நிலையில் துணை முதல்வர் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பலர் அவரை நேரில் சந்தித்து தனித் தனியாக பேசி வருகின்றனர்.
இந்நிலையில் அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் யார் என நாளை மறுநாள் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தனது டுவிட்டர் பக்கத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் தமிழக மக்கள் மற்றும் அஇஅதிமுக கழகத் தொண்டர்களின் நலனை கருத்தில் கொண்டு தான் எனது முடிவுகள் இதுவரை இருந்துள்ளன, இனியும் அவ்வாறு தான் இருக்கும் என பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,
தமிழக மக்கள் மற்றும் அஇஅதிமுக கழகத் தொண்டர்களின் நலனை கருத்தில் கொண்டே எனது முடிவுகள் இதுவரை இருந்துள்ளன. இனியும் அவ்வாறே இருக்கும்.
எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது!
எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது!!
எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்!!
— O Panneerselvam (@OfficeOfOPS) October 5, 2020