Bahujan Samajwadi Party State President Armstrong [File Image]
சென்னை: சென்னையில் பகுஜன் சமாஜ்வாடி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 8 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரதான தேசிய கட்சிகளில் ஒன்றான பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் தமிழக மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொடூர சம்பவம் சென்னை, பெரம்பூர் பகுதியில் உள்ள அவரது வீட்டின் அருகே நிகழ்ந்துள்ளளது. சென்னை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்து இறுதி அஞ்சலிக்காக கட்சி அலுவலகம் அல்லது வேறு பொது இடத்தில் ஆம்ஸ்ட்ராங் உடலை வைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
தேசிய கட்சியின் மாநில தலைவர் தலைநகர் சென்னையில் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை தொடர்பாக குற்றவாளிகளை தேடும் பணியில் சென்னை காவல்துறையினர் வெகு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கொலைக்கான விசாரணை தொடர்பாக சென்னை மூத்த போலீஸ் அதிகாரி NDTV செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘ நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம். முந்தைய கொலை சம்பவத்துடன் இந்த கொலைக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரிகிறது என தெரிவித்தார்.
மேலும், “கொலை வழக்கில், இதுவரை 8 நபர்களை சந்தேகத்துடன் நாங்கள் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம். இது முதற்கட்ட விசாரணை. இந்த கொலை வழக்கை விசாரிக்க 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் பணியில் நாங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம். சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட நபர்களிடம் தீவிர விசாரணை செய்து வருகிறோம். விசாரணைக்கு பின், நாங்கள், கொலைக்கான காரணத்தை கணிக்க முடிந்தது என்று மூத்த சென்னை போலீஸ் அதிகாரி அஸ்ரா கர்க் செய்தியாளர்களிடம் கூறினார்.
சென்னை : தமிழகத்தில் இன்று (மார்ச் 4) முதல் மார்ச் 8ம் தேதி வரை அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று முதல் அரையிறுதி போட்டி துபாய் சர்வதேச…
சென்னை : திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியில் அண்ணாநகரை சேர்ந்தவர் சுபலட்சுமி, இவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி 6 ஆண்டுகளுக்கு முன்னரே…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. இந்த போட்டியை அரையிறுதி…
சென்னை : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் குற்றசாட்டை முன்வைத்து புகார் அளித்து…
சென்னை : நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கி வருகின்ற 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளதாக…