பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் இதுவரை 35 பேருக்கு காயம்..!
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் இதுவரை காவல் ஆய்வாளர் உள்பட 35 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் இதுவரை காவல் ஆய்வாளர் உள்பட 35 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
இதில், 10 பேர் மேல்சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் விளையாடிய அரவிந்த் ராஜன் என்பவர் மாட்டு முட்டி படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.