தமிழகத்தில் இதுவரை 3,300 பேர் கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
தமிழகத்தில் இதுவரை 3,300 பேர் கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 122 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் கூறியுள்ளார்.
இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் ஏற்பட்ட கொரோனா இரண்டாம் அலை காரணமாக கொரோனாவின் தீவிரம் மிக அதிகமாக இருந்ததுடன் இந்த இரண்டாம் அலை காரணமாக கொரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பும் ஏற்பட ஆரம்பித்தது. இந்நிலையில், தமிழகத்திலும் பலருக்கு இந்த கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன், நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தும் உள்ளனர்.
இந்நிலையில், இது குறித்து பேசியுள்ள சுகாதார துறை அமைச்சர் ம.சுப்பிரமணியன் அவர்கள் இதுவரை தமிழகத்தில் 3,300-க்கும் அதிகமானோர் கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 122 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும், கருப்பு பூஞ்சை சிகிச்சைக்கு தேவைப்படும் ஆம்போடேரிசின் பி மருந்து 59 ஆயிரம் தமிழகத்தின் கையிருப்பில் உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.