தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியான ஸ்னோலின் உடல்ஒப்படைப்பு..!
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியான ஸ்னோலின் என்பவரது உடல் மறு உடற்கூறு ஆய்வுக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது, நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இவர்களில் ஏற்கனவே உடற்கூறு ஆய்வு செய்யப்பட்ட 7 பேரின் உடல்கள் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுபடி, ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர் அம்பிகா பிரசாத் தலைமையில் மறு உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது.
பின்னர், சண்முகம், செல்வசேகர், கார்த்தி, கந்தையா, காளியப்பன், தமிழரசன் ஆகியோரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. மினிசகாயபுரத்தை சேர்ந்த ஸ்னோலின் என்பவரது உடலை இன்று காலை அவரது உறவினர்களிடம் மாவட்ட நிர்வாகம் ஒப்படைத்தது.